< Back
சினிமா செய்திகள்
சிட்டாடல் வெப் தொடர் நிகழ்ச்சி: பிரியங்கா சோப்ரா - சமந்தா புகைப்படங்கள் வைரல்
சினிமா செய்திகள்

சிட்டாடல் வெப் தொடர் நிகழ்ச்சி: பிரியங்கா சோப்ரா - சமந்தா புகைப்படங்கள் வைரல்

தினத்தந்தி
|
26 Sept 2024 4:05 PM IST

நடிகை சமந்தா மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து சிட்டாடல் வெப் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

லண்டன்,

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா மயோடிசிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த சமந்தா ஆன்மீகம், உடற்பயிற்சி யோகா ஆகியவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா புதிய படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் இந்தி பதிப்பான 'சிட்டாடல் ஹனி பனி'யில் சமந்தா நடித்துள்ளார்.

நடிகை சமந்தா, ராஜ் மற்றும் டிகே இயக்கிய 'தி பேமிலி மேன்' சீசனில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது இவர்களது கூட்டணியில் 2-வது முறையாக 'சிட்டாடல் ஹனி பனி' என்ற வெப்தொடரிலும் நடித்துள்ளார். இந்த தொடரில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

'சிட்டாடல் ஹனி பனி' வெப் தொடர் வரும் நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாக லண்டனில் நடைபெற்ற அந்த வெப்தொடரின் பிரீமியர் நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் பிரியங்கா சோப்ரா பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்