< Back
சினிமா செய்திகள்
சினேகிதர்கள் எனது குடும்பம் -நடிகை ராஷ்மிகா மந்தனா
சினிமா செய்திகள்

''சினேகிதர்கள் எனது குடும்பம்" -நடிகை ராஷ்மிகா மந்தனா

தினத்தந்தி
|
13 Sept 2022 8:27 AM IST

சினேகிதர்களை எனது குடும்பமாகவே பார்க்கிறேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் ஜோடியாக தமிழ், தெலுங்கில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடித்த புஷ்பா படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். 2 இந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''எனது சிறு வயது வாழ்க்கை வீட்டை விட்டு தொலைவில் விடுதியில்தான் கழிந்தது. ஆனாலும் எனக்கு ஹாஸ்டல் வாழ்க்கை பாரமாக தோன்றவில்லை. எங்கு சென்றாலும் என்னை சுற்றி இருக்கிறவர்களை சினேகிதர்களாக மாற்றிக் கொள்வேன். அவர்களுடனான நட்பு என் குடும்பத்தையே மறக்கடித்தது. ஆசிரியைகளுடன்கூட மிகவும் அன்பாக பழகி அவர்களுக்குள்ளேயே என் அம்மாவை பார்த்துக் கொள்வேன். இப்போதும் சினேகிதர்களை குடும்பமாகவே பார்க்கிறேன். படிப்பில் நான் சராசரி மாணவிதான். ஆனால் பிளஸ் 2, டிகிரியில் மட்டும் நான்தான் கிளாஸ் டாப்பர். கணிதம், இயற்பியல், விலங்கியல் பாடங்களின் பெயர் சொன்னாலே எனக்கு நடுக்கம் ஆரம்பித்து விடும். அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு எனக்கு பிடித்த 'சி.ஈ.சி' குரூப்-ஐ பிளஸ் 1-ல் தேர்ந்தெடுத்ததால்தான் நான் கிளாஸ் டாப்பர் ஆனேன்" என்றார்.

மேலும் செய்திகள்