< Back
சினிமா செய்திகள்
2-வது இன்னிங்சில் கைக்கொடுக்காத சினிமா: சின்னத்திரைக்கு தாவும் வடிவேலு?
சினிமா செய்திகள்

2-வது இன்னிங்சில் கைக்கொடுக்காத சினிமா: சின்னத்திரைக்கு தாவும் வடிவேலு?

தினத்தந்தி
|
1 May 2024 6:57 AM IST

தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடிகர் வடிவேலு பங்கேற்க போவதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேலு ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' அவர் நாயகனாக நடித்ததில் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தபோது படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கருக்கும், வடிவேலுக்கும் மோதல் உருவாகி படம் நின்றுபோனது. இதில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படாததால் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்களாக வடிவேலு நடிக்காமலேயே இருந்தார். அதன்பிறகு பிரச்சினை தீர்க்கப்பட்டு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', 'மாமன்னன்', 'சந்திரமுகி 2' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வடிவேலு கைவசம் பெரிய அளவில் படங்கள் இல்லை.

இதனால் வடிவேலு சின்னத்திரைக்கு தாவப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வது பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வடிவேலுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் நடிகர் வடிவேலுக்கு சினிமா கைக்கொடுக்காத நிலையில், சின்னத்திரைக்குத் தாவியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்