சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
|உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: 'ரோஜாக்கூட்டம்', 'பார்த்திபன் கனவு' போன்ற படங்களில் நடித்த ஸ்ரீகாந்த் என்ன ஆனார்? (சங்கர் நாராயணன், காரைக்கால்)
பதில்: நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். 'வரலாறு முக்கியம்' போன்ற படங்களை பார்க்கவில்லையா?
கேள்வி: கீர்த்தி சுரேசுக்கு மாடர்ன் டிரஸ் அழகா? அல்லது சேலை அழகா? (மாணிக்கம், சேலம்)
பதில்: சேலையில் கொஞ்சம் செழிப்பாக தெரிகிறார்!
கேள்வி: வசனங்களை விட காட்சிக்கு அதிகம் மெனக்கெடும் இயக்குனர் யார்? (ராதிகா செல்வராஜ், ஊட்டி)
பதில்: மிஷ்கின்!
கேள்வி: மிக நீளமான பெயரை கொண்ட தமிழ் படம் எது? (சி.அசோக்ராஜா, அலங்காநல்லூர், மதுரை)
பதில்: 1993-ம் ஆண்டில் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியான 'ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்' என்ற படம் தான்!
கேள்வி: குருவியாரே... சமந்தா பற்றி தெரியாத தகவல் சொல்லுங்களேன்... (ஆசைத்தம்பி, அறந்தாங்கி)
பதில்: சமந்தாவுக்கு 'லிப்ட்'டில் செல்ல பயமாம். முடிந்தவரை ஏறவும், இறங்கவும் படிக்கட்டுகளை தான் பயன்படுத்துவாராம்!
கேள்வி: பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் பற்றி தெரியாத தகவல் சொல்லுங்களேன்... (ராசி, கும்பகோணம்)
பதில்: சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணியாற்றினார். 'காதலன்' படத்தில் 'என்னவளே... அடி என்னவளே...' பாடலுக்கு பிறகு, முழுநேரமாக சினிமாவுக்கு குடிவந்துவிட்டார்!
கேள்வி: சூர்யாவுக்கு பொருத்தமான ஜோடி யார்? (கண்ணன், நெல்லை)
பதில்: 'லைலா தான்' என்று 'ஜோ'...வே சர்டிபிகேட்' கொடுத்து பாராட்டியுள்ளாராம்!
கேள்வி: நடிகைகளின் மறுபக்கம் எப்படி இருக்கும்? (மல்லிகா நடராஜன், திருவண்ணாமலை)
பதில்: கடினமான பாதை தான். ஏற்ற-இறக்கங்கள் வேண்டுமானால் கொஞ்சம் மாறுபடலாம்!
கேள்வி: 'அலைகள் ஓய்வதில்லை' பட புகழ் ராதா மீண்டும் கலைச்சேவை ஆற்ற வருவாரா? (ராஜூ நரசிம்மன், தியாகராயநகர், சென்னை-17)
பதில்: அவர் தனது 2 மகள்களை மீண்டும் சினிமாவுக்கு கொண்டுவர பிரயாசைப்பட்டு கொண்டிருக்கிறார். அவரது எண்ணமெல்லாம் மகள்களை வளர்த்து விடுவதில் மட்டும் தானாம்!
கேள்வி: நடிகை ஷாலு ஷம்முவிடம் நட்பாக பழக ஆசைப்படுகிறேன், நடக்குமா குருவியாரே? (நவீன், தேனி)
பதில்: அவரை 'வாயாடி' என்று நண்பர்கள் செல்லமாக கூறுகிறார்கள். எனவே நீங்களும் வாய்ச்சொல்லில் வித்தைகளை காட்டினால் வாய்ப்பு உண்டு!
கேள்வி: சினிமாவில் நஸ்ரியாவின் 2-வது இன்னிங்ஸ் எப்படி? (உதயகுமார், கொடைக்கானல்)
பதில்: எதிர்பார்த்தபடி இல்லையாம்!
கேள்வி: 'தங்கலான்' படத்தில் நடித்த அனுபவம் பற்றி மாளவிகா மோகனன் என்ன சொல்கிறார்? (வாசு, திருச்சி)
பதில்:- 'அனுபவம் புதுமை, அவரிடம் கண்டேன்' என்கிறார்!
கேள்வி: 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...' என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது? எழுதியவர் யார்? (த.நேரு, வெண்கரும்பூர்)
பதில்: 'அவன்தான் மனிதன்' (1975). எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் வரிகளில் உருவான இந்த பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார்!
கேள்வி : ஸ்ரேயா சினிமாவுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது? (அனுராதா, ஆத்தூர்)
பதில்: சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிறது. திருமணம் ஆன பிறகு அவரது கவர்ச்சி இன்னும் பளிச்சிடுகிறது. அனுபவமே படிப்புதானே..!
கேள்வி: தீபிகா படுகோனே சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால்... (அரிகேசன் நம்பி, டெல்லி)
பதில்: பேட்மிண்டன் வீராங்கனையாக போயிருப்பார். பந்தை லாவகமாக கையாள்வதில் கில்லாடி. இவரது தந்தை பிரகாஷ் படுகோனே உலக பேட்மிண்டன் சாம்பியன்!
கேள்வி: 'கேன்ஸ்' பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (ஆர்.மாணிக்கம், திண்டுக்கல்)
பதில்: 'பூங்கொத்து' வடிவிலான அந்த ஆடையை அவரது கணவர் அபிஷேக் பச்சன் தான் தேர்வு செய்தாராம். என்ன ஒரு ரசனை அவருக்கு..!
கேள்வி: தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்க பிறமொழி இயக்குனர்கள் ஆர்வம் காட்டுவதேன்? (உமா, நெய்வேலி)
பதில்: கல்லா கட்டத்தான்!
கேள்வி: அமலாபால், திரிஷா, மும்தாஜ் ஆகியோர் கட்சி தொடங்கினால், யாருடைய அணியில் குருவியார் இருப்பார்? (ஜெ.மணிகண்டன், ஆம்பூர்)
பதில்: யாதும் ஊரே யாவரும் கேளிர்!
கேள்வி: 82 வயது ஹாலிவுட் நடிகர் அல்பசினோ, 29 வயது இளம்பெண்ணை காதலித்து 8 மாத கர்ப்பமாக்கி இருக் கிறாரே? (கார்த்திகேயன், திருவானைக்காவல்)
பதில்: (ஹாலிவுட்டில்) திருமணத்துக்கு முன்னாடி இதெல்லாம் சகஜமப்பா..!
கேள்வி: 'மிர்ச்சி' சிவா என்ன ஆனார்? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)
பதில்: ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்!
கேள்வி: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? (காஜா மைதீன், நெய்க்காரப்பட்டி, பழனி)
பதில்: 'தளபதி' நிச்சயம் 'தலைவர்' ஆவார், என்று அவரது இயக்கத்தினரும், ரசிகர்களும் நம்புகிறார்கள்!
கேள்வி: நீச்சல் உடை எந்த நடிகைக்கு பொருத்தமாக இருக்கும்? (கார்முகில், தேன்கனிக்கோட்டை)
பதில்: நடுத்தர உயரம் கொண்ட அத்தனை நடிகைகளுக்குமே நீச்சல் உடை பொருத்தமாகவே இருக்கும்!