சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
|உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி:- சமந்தா தனது இடுப்பில் முன்னாள் கணவர் பெயரில் போட்டிருந்த 'டாட்டூ'வை இன்னும் அழிக்காமல் வைத்திருக்கிறாரே, என்ன ரகசியம்? (கார்வேந்தன், கரூர்)
பதில்:- 'டாட்டூ'வின் சாரம் ரொம்ப ஆழமாக போய்விட்டதால் அழிக்க முடியவில்லையாம், அழிக்கவும் மனதில்லையாம்!
கேள்வி:- அப்பாஸ் என்ற ஒரு நடிகர் இருந்தாரே? என்ன ஆனார்? (விமல்ராஜ், நெய்வேலி)
பதில்:- நியூசிலாந்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். வணிக ஆய்வாளராக பணியாற்றும் அப்பாஸ், தற்கொலை எண்ணம் கொண்ட இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் திகழ்கிறார்!
கேள்வி:- 'அயோத்தி' படத்தில் சசிகுமாரின் நடிப்பு எப்படி? (ஓம்பிரகாஷ், வானூர்)
பதில்:- சிறந்த நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்!
கேள்வி:- அனுஷ்காவுக்கு திருமண ஆசையே இல்லையா? (க.வாசு, திருச்சி)
பதில்:- ஆசையெல்லாம் இருக்கிறது. சரியான ஆள் தான் கிடைக்கவில்லை!
கேள்வி:- மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் இணைந்து நடித்துள்ளாரா? (ஈரோடு குமரன், எஸ்.எஸ்.பி.நகர்)
பதில்:- இல்லை. ஆனால் 'ஒரு தாய் மக்கள்' என்ற படத்தில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் ஜெய்சங்கர் அந்தப் படத்தில் இருந்து விலகிக்கொண்டார். அவருக்கு பதிலாக முத்துராமன் நடித்தார்!
கேள்வி:- ஆபாச பட நடிகை மியா கலிபா பற்றி தெரியாத தகவல் ஒன்று சொல்லுங்களேன்? (எஸ்.சொக்கலிங்கம், மதுரை)
பதில்:- லெபனான் நாட்டை சேர்ந்த அந்த அழகி, தனது உடலில் தனது நாட்டின் தேசிய கீதத்தின் சில வரிகளை பச்சை குத்தியிருக்கிறாராம்!
கேள்வி:- விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி தற்போது குணமடைந்து விட்டாரா? (கே.எம்.ஸ்வீட் முருகன், கரடிகொல்லபட்டி, கிருஷ்ணகிரி)
பதில்:- 100 சதவீதம் குணமடைந்து விட்டார். மூக்கு, தாடை பகுதிகளில் 'பிளாஸ்டிக் சர்ஜரி' நடந்துள்ளதால் சற்று வித்தியாசமாக தெரிகிறார், அவ்வளவுதான்!
கேள்வி:- பிரியங்காசோப்ராவுக்கும், இலியானா வுக்கும் உள்ள ஒற்றுமை என்னவோ? (மணிகண்டன், ஊட்டி)
பதில்:- இலியானா இடுப்பழகி... பிரியங்கா சோப்ரா எடுப்பான அழகி!
கேள்வி:- குடும்ப பாங்காக இருக்கும் 'வாத்தி' புகழ் சம்யுக்தா கவர்ச்சியாக நடிப்பாரா? (சீதாராமன், திண்டுக்கல்)
பதில்:- 'கதைக்கு தேவைப்பட்டால் முத்தக்காட்சியில் நடிப்பதில் தவறு இல்லை' என்று கூறி இப்போது தான் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார். விரைவில் உங்கள் ஆசை நிறைவேறும்!
கேள்வி:- 'நாட்டாமை' படத்தில் நடித்த டீச்சரை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது, வாய்ப்பு கிடைக்குமா? (கடலை சேகர், விருது நகர்)
பதில்:- டீச்சரின் பெயர் ராணி. கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தப்பட்டு சினிமாவில் ஒதுங்கியிருந்த அவர், தற்போது ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்கவுள்ளார். டீச்சரை அதில் பாருங்கள்!
கேள்வி:- சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கோலோச்சி வரும் ராதிகா சரத்குமாரின் சிறப்பு என்னவோ? (கே.எஸ்.அசோக், தேனி)
பதில்:- எந்த கதாபாத்திரம் என்றாலும், அதை உள்வாங்கி அப்படியே மாறிவிடுவது தான். அந்தந்த வட்டார மொழிகளில் பிசிறு தட்டாமல் பேசி நடிக்கும் ஆற்றல் கொண்டவர்!
கேள்வி:- தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்? (த.நேரு, வெண்கரும்பூர்)
பதில்:- விஜய் தான்!
கேள்வி:- 'பிக்பாஸ்' டைட்டில் வென்ற அசீம் எங்கு போனார், ஆளையே காணோமே? (ஆர்.அரவிந்தன், ஊத்தங்கரை)
பதில்:- கதாநாயகனாக புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்!
கேள்வி:- நடிகை பத்மபிரியா என்ன ஆனார்? (லட்சுமி பிரபா, காட்டுப்பாக்கம்)
பதில்:- தமிழில் வாய்ப்பு கிடைக்காததால், அண்டை வீடான மலையாள சினிமாவில் தஞ்சம் புகுந்துள்ளார்!
கேள்வி:- 'முனி' படத்தின் 4-ம் பாகம் எப்போது வரும்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்:- 'சந்திரமுகி-2' படத்துக்கு பிறகு, அதற்கான வேலைகளில் இறங்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார்!
கேள்வி:- 'எனது மூக்கு சரியில்லை என கூறி படவாய்ப்புகளை மறுத்தனர்' என ராதிகா ஆப்தே வருத்தத்துடன் கூறியுள்ளாரே... (ஜெ.மணிகண்டன், ஏ.கஸ்பா, ஆம்பூர்)
பதில்:- வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், அவர் வாயுள்ள பிள்ளையாச்சே... இல்லையென்றால் வேலூரில் பிறந்த அம்மணி 'பாலிவுட்' வரை போய் விளையாட முடியுமா..!
கேள்வி:- நடிகை நமீதா இப்போதெல்லாம் தமிழை புகழ்ந்து பேசி வருகிறாரே? (கி.ராபர்ட், விழுப்புரம்)
பதில்:- குஜராத் சீமாட்டி அல்லவா... தமிழை பாராட்டி பேசத்தான் செய்வார்!
கேள்வி:- சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்களா? (எஸ்.அப்துல் சமது, மதுரை)
பதில்:- இருவரின் மார்க்கெட்டும் உச்சத்தில் இருப்பதால், இப்போதைக்கு வாய்ப்பு இல்லை!
கேள்வி:- பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் என்றால் என்ன? (சத்யநாராயணன், பட்டாபிராம், சென்னை-72)
பதில்:- தியேட்டர் டிக்கெட்டுகளின் மொத்த விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை குறிக்கிறது!
கேள்வி:- வெப் தொடர்களை விட சினிமாவில் தான் 'கிக்' அதிகம் இருக்கிறது, என்கிறாரே ராஷி கன்னா? (ஆறுமுகம், கடச்சனேந்தல்)
பதில்:- அகலத்தை விரும்பும் நடிகைகளில் அவரும் முக்கியமானவர்!
கேள்வி:- துல்கர் சல்மான் - மிருணாள் தாகூர் நடித்த 'சீதாராமம்' படத்தின் 2-ம் பாகம் வருமா? (மீனா பாலசுப்பிரமணியன், காரைக்கால்)
பதில்:- முதல் பாகம் வெற்றி தந்த உற்சாகத்தில், 'நிச்சயம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது' என இயக்குனர் ஹனு ராகவாபுடி கூறியிருக்கிறாரே..!
கேள்வி:- பாரதிராஜாவின் சிஷ்யனான பாக்யராஜ், குருவை மிஞ்சிவிட்டார் என்று சொல்லலாமா? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)
பதில்:- அதை பாரதிராஜாவே சொல்லி அகமகிழ்ந்து இருக்கிறாரே..!