< Back
சினிமா செய்திகள்
சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்

தினத்தந்தி
|
2 Jan 2023 6:00 PM IST

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: குருவியாரே நான் கேட்கும் கேள்விக்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள். விஜய், அஜித் குமாரில் யார் சூப்பர் ஸ்டார்? (சுப்பையா, திருச்சி)

பதில்: ரஜினிகாந்த்... அவர் இருக்கிறவரை , அவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்!

கேள்வி: ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே இருவரில் அழகி யார்? (மணி, மதுரை )

பதில்: ராஷ்மிகா 'கன்னடத்து மைசூர்பாகு', பூஜா ஹெக்டே 'மும்பை அல்வா'. இரண்டுமே 'திகட்டாத இனிப்பு' தான்!

கேள்வி: அனுஷ்கா - பிரபாஸ் இடையே காதல் இருக்கிறதா, இல்லையா...? (துரை சாமி, தென்காசி)

பதில்: இருக்கு... ஆனா இல்லை ..!

கேள்வி: தளபதி விஜய்யின் 67-வது படத்தை இயக்க ப்போவது யார்? (சரவணன் , ஈரோடு )

பதில்: லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார். இதையும் அதிரடி சண்டைப் படமாக எடுக்கப் போகிறார்களாம்!

கேள்வி: அஜித் - விஜய் மீண்டும் இணை ந்து நடிப்பார்களா? (பி.பி.பாஸ்கர், திண்டுக்கல்)

பதில்: இயக்குனர் வெங்கட் பிரபு போன்றவர்கள் அதற்காகத்தான் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். காலம் கனியும் என்று எதிர்பார்க்கலாம்!

கேள்வி: தமிழ் சினிமாவை மட்டுமல்ல , உலக சினிமாவையும் முழுவதுமாய் உணர்ந்த நடிகர் என்று யாரைச் சொல்ல முடியும்?(இலியாஸ், அரகண்ட நல்லூர்)

பதில்: சந்தேகம் என்ன . `உலக நாயகன்' கமல்ஹாசன் தான்!

கேள்வி: தமிழ் சினிமாவின் 'இஞ்சி இடுப்பழகி' என்ற பட்டத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார்? (டி.ராதா, நெல்லை)

பதில்: சிம்ரன், இலியானா வரிசையில் இப்போது தமன்னா !

கேள்வி: ராய்லட்சுமியின் பளபளப்புக்கு என்ன காரணம்? தினமும் பாலில் குளிக்கிறாரா? (கதிர், தூத்துக்குடி)

பதில்: அப்படி நினைத்தால் அது உங்கள் தவறு. ராய்லட்சுமியின் 'பளபளப்பு'க்கு அவரது பெற்றோர் தான் காரணம். இருவரும் 'ரொம்ப கலராம்'!

கேள்வி: அழகும், திறமை யும் இருந்தும் ஸ்ரீதிவ்யா , சிருஷ்டி டாங்கே, தன்ஷிகா போன்ற நடிகை கள் சினிமாவில் நிலைக்க முடியாமல் போனது ஏன்? (ராஜ்பால், திருச்சி)

பதில்: இரண்டை யும் தாண்டி அதிர்ஷ்டமும் வேண்டும் அல்லவா..!

கேள்வி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் யார்? கோ.பாலு, அறந்தாங்கி)

பதில்: முதலிடம் சரத்குமாருக்கு... இரண்டாம் இடம் அருண் விஜய்க்கு..!

கேள்வி: நகைச்சுவை நடிகர்களில் தற்போது முன்னணியில் இருப்பவர் யார்? (பி.ஜெய்சன் , கன்னியாகுமரி)

பதில்: சந்தேகமே வேண்டாம், யோகிபாபு தான். எல்லாம் வாழ்க்கைத்துணை வந்த நேரம் தான் என்கிறார்கள்!

கேள்வி: தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனர் யார்? (ராமராஜ், காஞ்சீபுரம்)

பதில்: டி.பி.ராஜலட்சுமி. 1936-ம் ஆண்டு இவர் இயக்கிய 'மிஸ் கமலா' என்ற திரைப்படம் வெ ளியானது!

கேள்வி: `லெஜண்ட்' சரவணனுக்கு ஜோடியாக நடிக்க சம்மதிக்காத நயன்தாரா, பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேருவாரா? (எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)

பதில்: இனிமேல் கதையின் நாயகியாகத்தான் நடிப்பாராம்!

கேள்வி:- நடிகை சதா ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்? (ஞானம், அடைக்கலாபுரம்)

பதில்:- தனக்கு இன்னும் அந்த வயது வரவில்லை என சதா உறுதியாக நம்புகிறாராம்!

கேள்வி: யாஷிகா ஆனந்த் ஓட்டப் பந்தய வீராங்கனையாக நடிப்பாரா? (ப. கார்த்திகேயன், வண்டலூர்)

பதில்: கேட்கிற சம்பளத்தையும்,உரிய வசதிகளையும் தயாரிப்பாளர்கள் செய்துகொடுத்தால், ஓட்டப்பந்தயம் என்ன , நீச்சல் வீராங்கனையாக நடிக்கவும் அவர் தயாராகவே இருக்கிறாராம்!

கேள்வி: அழுகையையும், சிரிப்பையும் ஒரே நேரத்தில் காட்டும் நடிகை யார்? (வேல், ராஜபாளையம்)

பதில்: முன்பு சரிதா... இப்போது சமந்தா ..! (கண்ணை மூடி கற்பனை செய்து பாருங்களேன்)

கேள்வி:- வாணி போஜன் யாரையாவது காதலிக்கிறாரா? (பி.சுடர்மணி, நாகர்கோவில்)

பதில்: அந்த 'கோவா' நடிகருடன் 'எங்கேயும் எப்போதும்' என வாணி போஜன் காதல் மயக்கத்தில் இருந்தாராம். தற்போது ஏதோ ஒரு விஷயம் தெரியவர அவரை விட்டு விலகி விட்டதாக தகவல் !

மேலும் செய்திகள்