< Back
சினிமா செய்திகள்
சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்

தினத்தந்தி
|
16 Oct 2023 10:32 AM IST

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: 'இடுப்பழகி' இலியானாவுக்கு ஒரு ஓட்டல் கட்டித்தர விரும்புகிறேன். ஓட்டலுக்கு என்ன பெயர் வைக்கலாம் குருவியாரே? (சந்திரசேகரன், மஞ்சம்பட்டி, மதுரை)

பதில்: 'அணையா அடுப்பு' என்று வைக்கலாமே!

கேள்வி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறதாமே? (அப்துல் ரஹீம், தூத்துக்குடி)

பதில்: உண்மை தான். இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது!

கேள்வி: நடிகை அமலா பல ஆண்டுகளுக்கு பிறகு மேடையேறி நடனம் ஆடியுள்ளாராமே... இனி அடிக்கடி அவரது ஆட்டத்தை பார்க்கலாமா? (ஆனந்த், மேட்டூர்)

பதில்: ஐதராபாத்தில் தனக்கு சொந்தமான சினிமா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் ஆடினார். மற்றபடி மேடை நிகழ்ச்சிகளில் அவர் ஆடமாட்டாராம்!

கேள்வி: நடிகை தான்யா ஹோப் ஊசி மூலமாக உதட்டை பெரிதாக்கியதாக கூறப்படுகிறதே... (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: அப்படியெல்லாம் இல்லையாம். இயற்கையிலேயே அவருக்கு பெரியது தானாம்!

கேள்வி: டிஜிட்டலில் வெளியான முதல் மலையாள படம் எது? (மீனு, கோவை)

பதில்: ஜெயராம் - சம்ருத்தா நடிப்பில் வெளியான 'மூனாமாதோரல்' (2006)!

கேள்வி: இயக்குனர்கள் பலர் இப்போது நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே? (பாத்திமா பஹதூர், ஜமாலியா லைன், சென்னை-11)

பதில்: பெயரும், புகழும், பணமும் எளிதாக கிடைத்துவிடுவதால்…!

கேள்வி: லிங்குசாமி இயக்கத்தில் 'பையா' படத்தின் 2-ம் பாகம் வருமா? (என்.சாமிநாதன், பட்டீஸ்வரம்)

பதில்: அதற்கான பேச்சுவார்த்தையின் தீவிரம் குறையத் தொடங்கி இருக்கிறதாம்!

கேள்வி: நடிகை ஷில்பா மஞ்சுநாத்துக்கு எது அழகு? (ஜான் அலெக்சாண்டர், சேலம்)

பதில்: ஆளை மயக்கும் அந்த இரண்டு கண்கள் தான், மற்றதெல்லாம் அப்புறம் தான்!

கேள்வி: ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்ற முதல் மலையாள திரைப்படம் எது? (ஊர்மிளா, கோவை)

பதில்: 'செம்மீன்' (1965)!

கேள்வி: லைலா, ரம்பா. இருவரில் யார் அழகு? சொல்லுங்கள் குருவியாரே... (ஆவுடையப்பன், கும்பகோணம்)

பதில்: இடைவெளிக்கு மேல் லைலா. இடைவெளிக்கு கீழ் ரம்பா!

கேள்வி: 'நடிகவேள்' எம்.ஆர்.ராதாவிடம் இருந்த சிறப்பம்சம் என்னவோ? (கலையரசி முகுந்தன், காஞ்சீபுரம்)

பதில்: ஒரு வார்த்தையை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்ற விதியை உடைத்த கலைஞன். இன்று வரையிலும் வசன உச்சரிப்பில் இவர் காட்டிய ஏற்ற இறக்கத்தை யாரும் முயற்சித்துக் கூட பார்த்தது கிடையாது!

கேள்வி: ஆண்ட்ரியா என்ன ஆனார்? ஆளையே காணவில்லையே... (எழில், கரூர்)

பதில்: அவரது 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கைவசம் 4 படங்களும் இருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் மாயமாகும் ஆளா அவர்?

கேள்வி: குருவியாரே... கால்ஷீட் என்றால் என்ன? (எஸ்.மயில்வாகனன், பழனி)

பதில்: கால்ஷீட் என்பது நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களுடன் செய்யப்படும் ஒப்பந்தம். ஒரு நடிகர் ஒரு படத்துக்கு 60 நாட்கள் கால்ஷீட் கொடுக்கிறார் என்றால், 60 நாட்களிலும் அவர் தினமும் 6 அல்லது 7 மணி நேரம் நடித்துக் கொடுக்க வேண்டும்!

கேள்வி: 43 வயதை கடந்தும் நடிகர் பிரபாஸ் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை? (வெண்பா, திருவாரூர்)

பதில்: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நபர் இன்னும் கண்ணில் படவில்லையாம்!

கேள்வி: 'சந்திரமுகி-2' வெற்றி படமா? தோல்வி படமா? (சந்தீப்குமார், நெல்லை)

பதில்: வணிக ரீதியில் வெற்றிப் படம் தான் என்கின்றனர் படக்குழுவினர்!

மேலும் செய்திகள்