சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
|உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: சமந்தா பின்னால் ரசிகர்கள் திரள காரணம் என்னவோ? (வீரமாணிக்கம், ஊமச்சிகுளம்)
பதில்: எடுப்பான அழகு தான்!
கேள்வி: எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு எத்தனை படங்களில் வாலி பாடல் எழுதி இருக்கிறார்? (சித்ரா கண்ணன், கடச்சனேந்தல்)
பதில்: 52 படங்களில் எம்.ஜி.ஆருக்கும், 66 படங்களில் சிவாஜிக்கும் வாலி பாடல்கள் எழுதியுள்ளார்!
கேள்வி: கீழடி அகழ்வாராய்ச்சி அதிகாரியாக 'வாளமீன்' புகழ் மாளவிகா நடிப்பாரா? (எம்.எஸ்.முத்துக்குமார், திருச்சி)
பதில்: நிச்சயமாக... ஆனால் தேடியது கிடைக்கும் வரை விடமாட்டார். வேலைன்னு வந்துட்டா மேடம் வெள்ளைக்காரி தான்!
கேள்வி: மலையாள நடிகர் மோகன்லால் பற்றி தெரியாத தகவல் சொல்லுங்களேன்... (ஆர்.பானுமதி, நாகர்கோவில்)
பதில்: அவர், ஒரு மல்யுத்த வீரர். 1977-78-ல் கேரளாவில் நடந்த மல்யுத்த போட்டியில் 'சாம்பியன்' பட்டம் வென்றவர்!
கேள்வி: வாணி போஜன் - பிரியா பவானி சங்கர் இடையே பிரச்சினையாமே? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)
பதில்: நீங்கள் பற்ற வைக்காதீர்கள். இருவரும் நல்ல தோழிகள் தானாம்!
கேள்வி: விவாகரத்து ஆனாலும் ராமராஜனை இன்னும் காதலிப்பதாக நளினி கூறுகிறாரே... (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: முதல் காதல் அல்லவா... அதான்!
கேள்வி: ரோஜாவும், ரம்யா கிருஷ்ணனும் உறவினர்களா? (கார்வேந்தன், கொடைக்கானல்)
பதில்: இல்லை. ரோஜா, 'ஆந்திரா' தக்காளி. ரம்யா கிருஷ்ணன் 'நாட்டு' தக்காளி!
கேள்வி: 'கல்கி' படத்தில் கமல்ஹாசன் நல்ல வில்லனா, கெட்ட வில்லனா? (ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு)
பதில்: உத்தம வில்லன்!
கேள்வி: 'மச்சான்' புகழ் நமீதா மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வருவாரா? (லிங்கதுரை, ஆத்தூர்)
பதில்: வளர்ந்த இடத்தை மறப்பாரா? கூப்பிட்டால் ஓடிவருவார்!
கேள்வி: நடை, உடை, இடைக்கு பிறகு நடிகைகளின் அழகு தெரிவது எதில்? (எஸ்.மாணிக்கம், மயிலாடுதுறை)
பதில்: தொடை அழகில்!
கேள்வி: சிவாஜி புரொடக் ஷ ன்ஸ் எத்தனை படங்களை தயாரித்துள்ளது? (த.சத்தியநாராயணன், அயன்புரம், சென்னை)
பதில்: 24 தமிழ் படங்களையும், 2 இந்தி படங்களையும் தயாரித்திருக்கிறது!
கேள்வி: பாலிவுட்டின் முதல் பெண் 'சூப்பர் ஸ்டார்' யார்? (குமரன், கோவில்பட்டி)
பதில்: நம்ம மயிலு தான், அதாங்க ஸ்ரீதேவி!
கேள்வி: நடிகைகளுக்கு கோவில் கட்டுகிறார்களே... எதைப் பார்த்து கும்பிடுவார்கள்? (மு.பெரியசாமி, திருத்துறைப்பூண்டி)
பதில்: அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது!
கேள்வி: தனுசின் உண்மையான பெயர் என்ன? (ஊர்மிளா நடராஜன், ஸ்ரீரங்கம், திருச்சி)
பதில்: வெங்கடேஷ் பிரபு... 'குருதிப்புனல்' படத்தில் வரும் 'ஆபரேஷன் தனுஷ்' என்ற வார்த்தை பிடித்துப்போக, தனது தந்தையிடம் கூறி அதையே சினிமா பெயராக வைத்துக்கொண்டார், தனுஷ்!
கேள்வி: கவர்ச்சி நடன அழகி ஜெயமாலினிக்கு எது அழகு? (கோ.பாலு, புரசைவாக்கம், சென்னை)
பதில்: 'காந்த கண்ணழகி' சில்க் ஸ்மிதா தன்னை ஒப்பந்தம் செய்யவரும் தயாரிப்பாளர்களிடம், "எனக்கு சேலை வேண்டாம், ஜெயமாலினியைப் போல் மேலே ஒரு உடை, கீழே ஒரு உடை தந்தால் போதும்" என்று சொல்வதுண்டாம். அந்தளவு ஜெயமாலினியின் எடுப்பான இடுப்பு அழகு!