சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்
|உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் காதலிக்கிறார்களாமே... (எஸ்.டி.திரவியம், தூத்துக்குடி)
பதில்: அந்த நட்சத்திர ஜோடி காதலில் 3-வது ஸ்டேஜ்-க்கே போய்விட்டார்கள்!
கேள்வி: சின்னத்திரை நடிகை ரேஷ்மாவின் உதடு ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கிறது, 'சர்ஜரி' செய்து கொண்டாரோ... (எஸ்.கவியரசன், மதுரை)
பதில்: அப்படி எதுவும் இல்லையாம். உதட்டை எடுப்பாக்க சில அழகுகலை முயற்சிகளை மேற்கொண்டி ருப்பதாக தகவல்!
கேள்வி: 'துருதுரு' நடிகர் ஜெய் இப்போதெல்லாம் அமைதியாக இருக்கிறாரே, ஏன்? (மலர்விழி, தேனி)
பதில்: 'இனிமே பேசினா வீண் வம்பு தேடி வரும்' என்று கோடம்பாக்கம் ஜோதிடர் சொல்லிவிட்டாராம். அதான் 'கப்சிப்' ஆகிவிட்டாராம்!
கேள்வி: வெப் தொடரில் நடித்திருக்கும் தமன்னா கவர்ச்சியில் கலங்கடித்து விட்டாரே... (த.மாணிக்கம், ஆழ்வார்குறிச்சி)
பதில்: இப்படி சொல்வோரிடம், 'இது வெறும் டிரெய்லர் தான்' என்று கூலாக சொல்கிறாராம்!
கேள்வி: 'முத்தின கத்திரிக்கா' படத்தில் நடித்த பூனம் பாஜ்வா என்ன ஆனார்? (சுடர்மணி, திருப்பூர்)
பதில்: அப்படித்தான் ஆகிவிட்டார்!
கேள்வி: காஜல் அகர்வால் சினிமாவுக்கு 'டாட்டா' சொல்லப் போகிறாராமே, உண்மையா குருவியாரே? (மல்லிகா நடராஜன், திருவண்ணாமலை)
பதில்: 2-வது இன்னிங்சை குறிவைத்து இறங்கியுள்ள காஜல், 'டாட்டா'வை கொஞ்சம் 'லேட்டா' தான் சொல்வாராம்!
கேள்வி: பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகையாக ஜொலிப்பாரா?(உத்தமன், விருதுநகர்)
பதில்: அந்த பட்டியலில் இடம் பிடிக்கத்தான், கவர்ச்சியிலும் கால் பதித்திருக்கிறார்!
கேள்வி: நடிகர்-நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர். இவர்களில் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் யார்? (ஆசைத்தம்பி, பிள்ளையார்பட்டி)
பதில்: ரசிகர்கள் தான்!
கேள்வி: ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டிடம் இருந்து பெற்ற விவாகரத்து நஷ்ட ஈடு ரூ. 116 கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு எடுத்துள்ளாராமே? (கலாவதி வரதராஜன், நீலகிரி)
பதில்: இதென்ன பிரமாதம்... இருப்பதை பகிர்ந்ததில் வந்த பிரச்சினை தானே விவகாரத்துக்கே காரணம்!
கேள்வி: சமூக கருத்துள்ள படங்களை மீண்டும் சேரன் தருவாரா? (ம.தனலட்சுமி, கரூர்)
பதில்: தயாராகத்தான் இருக்கிறார். தயாரிப்பாளர்கள் தான் துணிவுடன் அணுக வேண்டும்!
கேள்வி: இப்போதெல்லாம் ஹீரோ, வில்லன்களாக நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களே... (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)
பதில்: 'டிரெண்ட்' மாறிவிட்டது!
கேள்வி: நான் நடத்தும் டீக்கடைக்கு சில்க் ஸ்மிதா, அனுராதா, சமந்தா, ஐஸ்வர்யா ராய். இவர்களில், யார் பெயரை வைக்கலாம்? (ராஜூ நரசிம்மன், தியாகராயநகர், சென்னை-17)
பதில்: 'சில்க்' பெயரை வையுங்கள். 'மில்க்' ஓட்டம் சூப்பராக இருக்கும். தண்ணி மட்டும் ரொம்ப கலந்துடாதீங்க..!
கேள்வி: பெரும்பாலான நடிகைகளின் காதல் தோல்வியில் முடிய என்ன காரணம்? (டி.எம்.அறிவழகன், கோவை)
பதில்: ஒத்திகையிலேயே ஒத்துவராமல் போவது தான்!
கேள்வி: 'உலகநாயகன்' கமல்ஹாசன் பற்றி இரண்டே வார்த்தையில் சொல்லுங்களேன்... (கதிர் முருகன், பழனி)
பதில்: நடிப்பின் 'பிக்பாஸ்'!
கேள்வி: நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருவதை போல, அஜித்குமாரும் வருவாரா? (பாலாஜி, சொர்ணகுப்பம், கோலார் தங்கவயல்)
பதில்: அதற்கு வாய்ப்பில்லை ராஜா..!
கேள்வி: சுருதிஹாசன் பக்தி படங்களில் நடிப்பாரா? (அனுராதா, ஆத்தூர்)
பதில்: கதைக்கு தேவைப்பட்டால் எந்த கதாபாத்திரத்திலும் அவர் நடிக்க தயார் தான். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..!
கேள்வி: வடிவேல் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடிப்பாரா? (கே.ஆர்.ரவீந்திரன், சென்னை-1)
பதில்: 'மாமன்னன்' படம் அந்த நம்பிக்கையை அவருக்குள் விதைத்திருக்கிறதாம்!
கேள்வி: சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற சரியான ஜோடி யார்? (தேவராஜன், நாமக்கல்)
பதில்: கீர்த்தி சுரேஷ். ஜாடிக்கு ஏற்ற மூடி போல பொருத்தமாக இருப்பார்!
கேள்வி: ஆந்திராவில் சமந்தாவுக்கு கோவில் கட்டியிருக்கிறார்களே? (எம்.டி.ஆர்.வரதராஜன், காஞ்சீபுரம்)
பதில்: ஆமாம். நம்மை முந்திவிட்டார்களே... என்ற வருத்தத்தில் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்களாம்!
கேள்வி: மனைவி சினேகாவை எப்போதுமே பிரசன்னா புகழ்ந்து தள்ளுகிறாரே... அதன் ரகசியம் தான் என்ன? (விஜயலட்சுமி, சிம்மக்கல், மதுரை)
பதில்: விட்டுக்கொடுப்பது தான்!
கேள்வி: 'கெட்டவனாக நடிக்கும்போது நடிப்புத்திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்' என்கிறாரே, ஜெயம் ரவி. (உலகநாயகி, தேவிபட்டினம்)
பதில்: சரிதான்... அவருக்கும் வில்லன் ஆசை வந்துவிட்டது..!
கேள்வி: சினிமா மொழியில் 'ஆந்தாலஜி' படம் என்றால் என்ன? (காத்திகேயன், நாட்டரசன் கோட்டை)
பதில்: வெவ்வேறு கதைகளை, வெவ்வேறு டைரக்டர்கள் இயக்கி ஒரே படமாக கொடுத்தால் அதுவே 'ஆந்தாலஜி' படம்!
கேள்வி: ஹன்சிகாவை பற்றி நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இப்படி பேசலாமா? சபை நாகரிகம் தெரியாதா அவருக்கு? (ரேகா மாணிக்கம், திருச்சி)
பதில்: எல்லை மீறிய பேச்சு தான். இதற்காக படக்குழு மன்னிப்பு கேட்டிருக்கிறது!
கேள்வி: வெப் தொடர்களில் கிடைக்கும் முக்கியத்துவம், படங்களில் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என பூமிகா வருத்தம் தெரிவித்துள்ளாரே... (ஜெ.மணிகண்டன், ஏ.கஸ்பா, ஆம்பூர்)
பதில்: 'சென்சார்' தேவையில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார் போலும்!