சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்
|உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி:- பிரபாஸ் - அனுஷ்கா காதல் என்ன ஆனது? (கே.ஆர்.முத்துசெல்வன், பரமக்குடி)
பதில்:- கதம்... கதம்..!
கேள்வி: சமந்தா, சாயிஷா வரிசையில் ராசி கன்னாவும் கவர்ச்சி நடனம் போடுவாரா? (கனகராஜ், அறந்தாங்கி)
பதில்: கேட்பதை கொடுத்தால் கேட்டதெல்லாம் செய்வாராம்!
கேள்வி: பேய் பட சீசன் முடிந்து விட்டது போல் தெரிகிறதே? (சத்தியநாராயணன், அயனாவரம், சென்னை)
பதில்: பேய்களுக்கும் கொஞ்சம் ஓய்வு தேவையாம்!
கேள்வி: இனிமேல் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க இருப்பதாக பிரபுதேவா கூறியிருக்கிறாரே, சினிமாவை விட்டு ஓய்வு பெறுகிறாரா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: ஆடிய கால் சும்மா இருக்குமா... இருக்காதே!
கேள்வி:- `ஹாலிவுட்டில் எனது திறமையை நிரூபித்து விட்டேன்' என்கிறாரே பிரியங்கா சோப்ரா... (சந்திரசேகரன், சோழவந்தான்)
பதில்:- ஆமாம், முன்னணி நடிகர்களுமே இதையே தான் சொல்கிறார்களாம்!
கேள்வி: நடனத்தை மையமாக கொண்ட படத்தில் சாய் பல்லவி நடிப்பாரா? (டி.ரகுவரன், அண்ணாநகர், மதுரை)
பதில்: அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது தனது கனவு படமாக இருக்கும் என்று சாய் பல்லவியே சொல்லியிருக்கிறாரே..!
கேள்வி: பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் பல விமர்சனங்களை எதிர்கொண்டும் கவலையின்றி சிரித்த முகமாக வலம் வருகிறாரே, எப்படி குருவியாரே? (கனகரத்தினம், துவரங்குறிச்சி)
பதில்: கிராமத்து ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மைனர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தானே..!
கேள்வி: `பார்த்த முதல் நாளே...' புகழ் கமலினி முகர்ஜி 43 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? (விஜய், கூடலூர்)
பதில்: சினிமாவில் இன்னும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கலாம்!
கேள்வி: என் கனவு கன்னி மியா கலிபா, சிம்புவுடன் இணைந்து நடிப்பாரா? (கோபாலு, புரசைவாக்கம், சென்னை)
பதில்: சில்வண்டு சிக்கும், ஆனால் சிறுத்தை சிக்காது!
கேள்வி: இந்திய சினிமாவிலேயே விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் யார்? (கார்த்திகை செல்வன், பழனி)
பதில்: இந்தி நடிகர் அக்ஷய்குமார்!
கேள்வி: சிம்புவும், தனுசும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்களா? (ஓசை செல்வம், விருதுநகர்)
பதில்: தரமான கதை அமைந்தால், இரண்டு பேரும் இணைந்து நடிப்பது பற்றி பரிசீலிப்பார்களாம்!
கேள்வி:- `என்னை அறிந்தால்...', `விஸ்வாசம்' படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா கவர்ச்சியில் கலக்க தொடங்கிவிட்டாரே? (சூர்ய பிரகாஷ், காவனூர், ராமநாதபுரம்)
பதில்: சினிமா மார்க்கெட்டை பிடிக்கும் வித்தையை பிஞ்சிலேயே கற்றுவிட்டார்!
கேள்வி: குருவியாரே… பூனம் பாஜ்வா என்னதான் செய்கிறார், ஏன் அவர் முன்புபோல நடிப்பதில்லை? (மு.அகிலன், ஆனையூர்)
பதில்: உடல் எடை தாறுமாறாக அதிகரித்ததால் வாய்ப்புகளை இழந்தார். இப்போது உடல் இளைக்க உழைக்கிறார். விரைவில் ஒரு பாடலுக்கு நடனமாட வருவாராம்!
கேள்வி: `நடிப்பு விஷயங்களை முழுமையாக அறிந்தவர்களே இல்லை', என்று நிதி அகர்வால் கூறியிருக்கிறாரே? (சங்கர்குமார், நெய்வேலி)
பதில்: கற்றது கைமண் அளவு என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்!
கேள்வி: மலையாள படத்தில் பிரித்விராஜூக்கு உதட்டுடன் உதடு சேர்த்து அமலாபால் சூடாக முத்தமழை பொழிந்துள்ளாரே... (கே.எம்.ஸ்வீட்முருகன், கரடிகொல்லபட்டி, கிருஷ்ணகிரி)
பதில்: அந்த முத்த காட்சிக்கு மட்டும் 16 `டேக்' போன தகவல் தெரிந்தால் நீங்கள் இன்னும் சூடாகி போவீர்கள்!
கேள்வி: அம்மா வேடங்களில் நடிக்க நடிகைகள் தயங்குவது ஏன்? (ம.மீனாட்சி சுந்தரம், நாட்டரசன்கோட்டை)
பதில்: சீனியர் நடிகைஎன்று ஒதுக்கிவிடுவார்களே... என்ற பயம் தான்!
கேள்வி:- அழுகையிலும் அழகாக இருக்கும் நடிகை யார்? (சு.வனிதா, காட்டு மன்னார் கோவில்)
பதில்:- மீனா!
கேள்வி: சல்மான்கானை காதலிக்கவில்லை என பூஜா ஹெக்டேவும் கடைசியில் கைவிரித்து விட்டாரே? (மலர்விழி, தேனி)
பதில்: பாவம் சல்மான் கான். காதலில் ராசி இல்லாதவர்!
கேள்வி: முன்னணி நடிகர்களின் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வது போல நடிகைகளுக்கு செய்வதில்லையே... (எழிலரசன், சேலம்)
பதில்: அந்த மன வருத்தம் நடிகைகளுக்கும் இருக்கிறதாம்!
கேள்வி:- விளம்பரங்களிலும் நடிக்க நடிகர்-நடிகைகள் ஆசைப்படுவது ஏன்? (ராஜராஜன், தஞ்சாவூர்)
பதில்:- குறைந்த நேரத்தில் அதிக பலன் (பணம்) கிடைப்பதால் தான்!
கேள்வி: மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கும் நடிகை அஹானா கிருஷ்ணா எப்படி இருக்கிறார்? (வளர்மதி, வாணியம்பாடி)
பதில்: படவாய்ப்புகளால் உற்சாகமாக இருக்கிறார். அடுத்து தமிழ் திரையுலகில் கால்பதிக்கவும் தயாராகி வருகிறார்!
கேள்வி: ஜாக்குலின் பெர்ணாண்டசுக்கு எது அழகு? குருவியாரே கொஞ்சம் சொல்லுங்களேன்… (ராஜ்குமார், திருவண்ணாமலை)
பதில்: எடுப்பான கெண்டை கால் தான் அழகு!