சினிமா கேள்வி-பதில்கள்; குருவியார்
|சினிமா தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: குருவியாரே... 'காதல்' சந்தியா என்ன ஆனார்? (என்.வேணு, கிருஷ்ணகிரி)
பதில்: சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறார்!
**********************
கேள்வி: 'எல்.ஜி.எம்.' படத்தில் நதியா எப்படி இருக்கிறார்? (ஜி.எஸ்.சுப்பிரமணியன், நெல்லை)
பதில்: 56 வயதிலும் அழகாக தெரிகிறார். பெருசுகள் ஜாக்கிரதை!
**********************
கேள்வி: பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவ என்ன காரணம்? (ஆதிராஜன், கும்பகோணம்)
பதில்: சரியாக ஒத்துழைப்பு தராததே காரணமாம்!
**********************
கேள்வி: கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியின் சிறப்பு என்னவோ? (விக்னேஷ், நரசிங்கபுரம், மதுரை)
பதில்: பெண்களுக்கு கொஞ்சம் கவர்ச்சியாகச் சேலை கட்ட கற்றுக்கொடுத்தது அவர்தான்!
**********************
கேள்வி: கவுண்டமணியும், செந்திலும் இணைந்து எத்தனை படங்களில் நடித்துள்ளனர்? (எ.சீனிவாச குமரன், பழனிபுரம், பவானி)
பதில்: 450-க்கும் மேற்பட்ட படங்களில் கலக்கி இருக்கிறார்கள்!
**********************
கேள்வி: சந்தானம் நடித்துள்ள 'டி.டி.ரிட்டன்ஸ்' வெற்றிப்படமா? (எஸ்.பார்வதி, பிள்ளையார்பட்டி)
பதில்: நிச்சயமாக. சந்தானத்துக்கும் 'ரிட்டன்ஸ்' தான்!
**********************
கேள்வி: 'லட்சிய நடிகர்' எஸ்.எஸ்.ராஜேந்திரனின் சிறப்பம்சம் என்னவோ? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)
பதில்: தெள்ளிய தமிழில் கணீர் குரலில் பேசுவது தான்!
**********************
கேள்வி: வயதானாலும் இளமை மாறாத நடிகை யார் கொஞ்சம் சொல்லுங்கள் குருவியாரே...? (ஆர்.ரங்கசாமி, வடுகப்பட்டி)
பதில்: 'டை' அடிக்கும் நடிகைகள் அனைவருமே தான்!
**********************
கேள்வி: அமலாபால் மறுபடியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டாரே... (சிலம்பரசன், தேனி)
பதில்: காணாமல் போய்விடக் கூடாதல்லவா... அதான்!
**********************
கேள்வி: அன்றைய இளைய ராஜாவுக்கும், இன்றைய இளையராஜாவுக்கும் என்ன வித்தியாசம்? (ஏ.எஸ்.நடராஜன், எஸ்.பி.கோவில் தெரு, சிதம்பரம்)
பதில்: வயது தான்!
**********************
கேள்வி: ராகவா லாரன்ஸ் நடித்த படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் எது? (வாசுகி சகாதேவன், கன்னியாகுமரி)
பதில்: 'காஞ்சனா-2'. ரூ.115 கோடி வரை வசூல் செய்து 'மாஸ்' காட்டிய படம் அது!
***********************
கேள்வி: 3-டி படங்கள் எடுப்பது குறைந்து விட்டதே... (அ.முரளிதரன், மதுரை)
பதில்: கண்ணாடி கொடுத்து மாளவில்லையாம். பாதி பேர் வீட்டுக்கு கொண்டு சென்றுவிடுகிறார்களாம்!
***********************
கேள்வி: குருவியாரே...சமந்தா சாமியாராகி விடுவார் போல தெரிகிறதே... (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)
பதில்: காவியிலும் தரிசனம் தருவார். கவலை வேண்டாம்!
***********************
கேள்வி: எந்த இயக்குனர் படங்களில் ரஜினிகாந்த் அதிகமுறை நடித்துள்ளார்? (ஆ.செந்தமிழன், ஊட்டி)
பதில்: எஸ்.பி.முத்துராமன். 25 படங்கள் நடித்துள்ளார்!
***********************
கேள்வி: ரசிகர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் திட்டம் உள்ளது என சிவகார்த்திகேயன் கூறுகிறாரே? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: சமூக சேவையில் அவரது பார்வையும் திரும்பிவிட்டது போல!
***********************