< Back
சினிமா செய்திகள்
விஜய்யுடன் இணைந்து நடிப்பேன் - நடிகர் விக்ரம்
சினிமா செய்திகள்

விஜய்யுடன் இணைந்து நடிப்பேன் - நடிகர் விக்ரம்

தினத்தந்தி
|
2 Sept 2022 5:38 PM IST

விஜய்யுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க விக்ரம் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

விக்ரம் நடித்த 'கோப்ரா' படம் திரைக்கு வந்துள்ளது. பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் சில பிரச்சினைகளால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அடுத்து பா.ரஞ்சித் பவன் குமார் அஜய் ஞானமுத்து ஆகியோர் இயக்கும் 3 புதிய படங்களில் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க விக்ரம் விருப்பம் தெரிவித்து உள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் விக்ரம் கலந்துரையாடியபோது விஜய்யும் விக்ரமும் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது இருவரையும் வைத்து படம் இயக்குவேன் என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்தார்.

விக்ரம் கூறும்போது ''விஜய் சிறந்த நடிகர். கடினமான நடன அசைவுகளையும் எளிமையாக செய்வதை பார்த்து வியந்துள்ளேன். அவரது நகைச்சுவை உணர்வு எனக்கு பிடிக்கும். எதிர்காலத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்