< Back
சினிமா செய்திகள்
Chiyaan Vikram wraps up first schedule of Veera Dheera Sooran; shares heartfelt note
சினிமா செய்திகள்

வீர தீர சூரன்: முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - வீடியோ வெளியிட்ட விக்ரம்

தினத்தந்தி
|
19 May 2024 10:22 AM IST

வீர தீர சூரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றதை வீடியோ வெளியிட்டு தெரிவித்த விக்ரம்.

சென்னை,

சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு 'வீர தீர சூரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விக்ரமின் பிறந்த நாள் அன்று படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. முதலில் இதன் இரண்டாம் பாகம் படமாக்கப்படுகிறது. முன்னதாக இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது.

இந்நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில், உங்கள் அன்பிற்கு என்றும் நான் அடிமை. முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றது, இவ்வாறு தெரிவித்தார்.

நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு எற்கனவே நிறைவடைந்த நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்