படம் தோல்வியால் சம்பளத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி
|தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் தோல்வி அடைந்ததால் சம்பளத்தை திருப்பி கொடுத்தார்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. ஆனால் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் காட்பாதர் தெலுங்கு படம் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் சிரஞ்சீவி தோல்வி அடைந்த ஆச்சார்யா படத்துக்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டார். இதுகுறித்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசும்போது, "படம் தோல்வி அடைந்ததால் அதற்கான முழுப்பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். இதனால் எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. நானும், ராம் சரணும் ஆச்சார்யா படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் இருந்து 80 சதவீதத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டோம்" என்றார். சிரஞ்சீவிக்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர். வெற்றிகரமாக ஓடும் காட்பாதர் படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. காட்பாதர் படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து சிரஞ்சீவி தயாரித்துள்ளார். மோகன்ராஜா இயக்கி உள்ளார். சல்மான்கான், சமுத்திரக்கனி, சத்யதேவ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.