< Back
சினிமா செய்திகள்
கதாநாயகனாக சின்னி ஜெயந்த்
சினிமா செய்திகள்

கதாநாயகனாக சின்னி ஜெயந்த்

தினத்தந்தி
|
29 Sept 2023 12:47 PM IST

காந்தாரா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்திரஜா டைரக்டு செய்யும் படத்தில் சின்னி ஜெயந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சின்னி ஜெயந்த் தற்போது 6 புதிய படங்களில் நடித்து வருகிறார். ஜெய் தினாவுடன் `நடிகன் பிரம் அருப்புக்கோட்டை' என்ற படத்தில் கமல்ஹாசன் ரசிகராக வருகிறார். இந்தப் படத்தை நாதிர்ஷா டைரக்டு செய்கிறார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற `கட்டப்பனையிலே ஹிருத்திக் ரோஷன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆக இது உருவாகிறது.

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் `நூறுகோடி வானவில்' படத்திலும் நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜியுடன் `சிங்கப்பூர் சலூன்', நரேன் கார்த்திக் இயக்கத்தில் அதர்வா, சரத்குமாருடன் `மூன்று நிறங்கள்' படங்களிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் அடுத்து காந்தாரா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்திரஜா டைரக்டு செய்யும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மூன்றரை வயது குழந்தையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதில் டிரைவராக சின்னி ஜெயந்த் வருகிறார். அவரது நண்பன் கதாபாத்திரத்தில் வையாபுரி நடிக்கிறார். படத்துக்கு `பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்' என்று பெயர் வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்