< Back
சினிமா செய்திகள்
மீண்டும் சின்னி ஜெயந்த்
சினிமா செய்திகள்

மீண்டும் சின்னி ஜெயந்த்

தினத்தந்தி
|
5 May 2023 11:18 AM IST

தமிழில் நகைச்சுவை குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான சின்னி ஜெயந்த் 1984-ல் வெளியான `கைக்கொடுக்கும் கை' படத்தில் அறிமுகமானார்.

சிவாஜி கணேசனுடன் 12 படங்களிலும், ரஜினிகாந்துடன் 15 படங்களிலும், கார்த்திக், முரளி என்று அன்றைய முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து 400 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

சினிமாவில் 39 வருடங்களாக நீடிக்கும் சின்னி ஜெயந்த் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு தற்போது மீண்டும் பிஸியாக நடிக்கத் தொடங்கி உள்ளார்.

அதர்வாவுடன் `டிரிக்கர்' படத்தில் நடித்துள்ளார்.

தற்போது விஜய்சேதுபதியுடன் `யாதும் ஊரே யாவரும் கேளிர்', ஜெய்யுடன் `நடிகன் பிரம் அருப்புக்கோட்டை', ஹரிஷ் கல்யாணுடன் `ஆயிரம் கோடி வானவில்', ஆர்.ஜே.பாலாஜியுடன் `சிங்கப்பூர் சலூன்', ஹிப்ஹாப் ஆதியுடன் `வீரன்', சிம்புத்தேவன் இயக்கும் `படகு' ஆகிய 7 படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்