< Back
சினிமா செய்திகள்
திருமணத்துக்கு முன்பே பிரசவம்: குழந்தையின் தந்தையை அறிவித்த இலியானா
சினிமா செய்திகள்

திருமணத்துக்கு முன்பே பிரசவம்: குழந்தையின் தந்தையை அறிவித்த இலியானா

தினத்தந்தி
|
20 Aug 2023 8:24 AM IST

திருமணத்துக்கு முன்பே பிரசவம்: குழந்தையின் தந்தையை அறிவித்த இலியானா

பாலிவுட்டின் முன்னணி நடிகையான 'இடுப்பழகி' இலியானா, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். கர்ப்பமாக இருக்கும் தனது புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.

திருமணமாகாத நிலையிலும் கர்ப்பம் என்பதை அறிவித்த அவர், 'அதற்கு காரணம் யார்?' என்பதை மட்டும் சொல்லவில்லை. சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தபோதும், கணவர் யார்? என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. இலியானா விஷயத்தில் எல்லாமே தலைகீழாக நடக்கிறதே... என ரசிகர்களும் குழப்பத்தில் இருந்தனர்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் மைக்கேல் டோலனை இலியானா காதலிப்பதாகவும், அவர் தான் கர்ப்பத்துக்கு காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கிடையே தனது கணவர் மைக்கேல் டோலன் தான் என்று இலியானா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது என்றும், குழந்தைக்கு கோயா பீனிக்ஸ் டோலன் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள், 'இப்போதாவது இதற்கு ஒரு முடிவு தெரிந்ததே...' என்று நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்