நீண்ட இடைவெளிக்குப்பின் சேரன் நடிக்கும் புதிய படம்
|நீண்ட இடைவெளிக்குப்பின் சேரன் ‘தமிழ்குடிமகன்' என்ற படத்தில் நடிக்கிறார்.
தமிழ் பட உலகின் திறமையான டைரக்டர்களில் ஒருவர், சேரன். இவர் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் இருக் கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் இவர், 'தமிழ்குடிமகன்' என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்கிறார். லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தைப்பற்றி டைரக்டர் இசக்கி கார்வண்ணன் கூறியதாவது:-
"இது ஒரு மனிதனின் குடியுரிமையை பற்றிய படம். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தும், சமுதாய சமநிலை பற்றியும் இந்தப் படம் பேசும். மேற்கண்டவை பற்றி இதுவரை யாரும் கூறாத, வித்தியாசமான கோணத்தில் படம் இருக்கும்.
படத்தின் கதைக்கு சேரன் பொருத்தமாக இருக்கிறார். அவரது நடிப்பு பக்கபலமாக இருக்கிறது. டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் லால் நடிக்கிறார். துருவா, ஸ்ரீபிரியங்கா, வேல ராமமூர்த்தி, ரவிமரியா, மதுரையைச் சேர்ந்த நாடக நடிகர் எம்.கே.ஆர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.