< Back
சினிமா செய்திகள்
இஸ்க் பட இயக்குனருடன் இணைந்த சேரன்
சினிமா செய்திகள்

'இஸ்க்' பட இயக்குனருடன் இணைந்த சேரன்

தினத்தந்தி
|
22 July 2024 3:37 PM IST

‘இஸ்க்’ பட இயக்குனரின் ‘நரிவெட்டா’ படத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்க உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி நடித்துள்ள சேரன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார். அதன்படி இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாள திரையுலகில் நடிகராக களம் இறங்குகிறார்.

இது தொடர்பான பதிவில், "நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது.. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன்.. என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்