'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் புரோமோ பாடல் வெளியானது
|‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தின் புரோமோ பாடலான ‘மை மைமா’ வெளியாகியுள்ளது.
சென்னை,
சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் வைபவ். பின்னர், 'கப்பல், மேயாத மான்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள 'தி கோட்' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து நடிகர் வைபவ், 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ஆனந்த் ராஜ், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இது நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படக்குழு படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களில் அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. நடிகர் வைபவ் 'பாண்டி' கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ஆனந்த் ராஜ், சுனில் ரெட்டி மற்றும் மணிகண்டன் ஆகியோரின் கதாப்பாத்திரத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் புரோமோ பாடலான 'மை மைமா' என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடல் கானா பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு மற்றும் ஆப்ரோ வரிகளில் கானா குணா, கானா தரணி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது