< Back
சினிமா செய்திகள்
செக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு பிடிவாரண்டு
சினிமா செய்திகள்

செக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு பிடிவாரண்டு

தினத்தந்தி
|
8 April 2023 8:47 AM IST

தமிழில் விஜய் நடித்து 2003-ல் வெளியான 'புதிய கீதை' படத்தில் நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். குணால் குரூமர் என்பவருடன் இணைந்து அமீஷா பட்டேல் இந்தி படமொன்றை தயாரிக்க அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் பெற்று இருந்தார்.

பின்னர் அந்த கடனை திருப்பி கொடுக்கவிலை. அஜய்குமார் பலமுறை வற்புறுத்திய பிறகு அவருக்கு அமீஷா பட்டேல் ரூ.2.5 கோடிக்கான இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதையடுத்து அமீஷா பட்டேல் மீது அஜய்குமார் ராஞ்சி கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை அமீஷா பட்டேலுக்கும், அவரது தொழில் பங்குதாரருக்கும் பலமுறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து நீதிபதி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்