< Back
சினிமா செய்திகள்
குழந்தைகள் படத்தில் சார்லி, எம்.எஸ்.பாஸ்கர்
சினிமா செய்திகள்

குழந்தைகள் படத்தில் சார்லி, எம்.எஸ்.பாஸ்கர்

தினத்தந்தி
|
26 May 2023 9:25 AM IST

முன்னணி நகைச்சுவை நடிகர்கள் சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'எறும்பு'. குழந்தை நட்சத்திரங்கள் சக்தி ரித்விக், மோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சுரேஷ் குணசேகரன் டைரக்டு செய்து தயாரித்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, "குழந்தைகள் படமாக தயாராகிறது. வீட்டில் இருந்த ஒரு தங்க மோதிரத்தை சக்தி ரித்விக் விரலில் மாட்டிக்கொண்டு திரியும்போது, அது தொலைந்து விடுகிறது. அந்த மோதிரத்தை தேடிக்கண்டுபிடித்து பெற்றோருக்கு தெரியாமல் எடுத்த இடத்தில் வைத்து விட சக்தி ரித்விக்கும், சகோதரி மோனிகாவும் முயற்சி செய்கின்றனர். மோதிரம் கிடைத்ததா என்பது கதை.

கிராமத்து மக்களுக்கு தங்கம் எவ்வளவு முக்கியம் என்பது படத்தில் காட்சியாக இருக்கும். சக்தி ரித்விக்கின் தந்தையாக சார்லி, நண்பராக ஜார்ஜ் மரியான், கந்துவட்டிக்காரராக எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்" என்றார்.

மேலும் செய்திகள்