< Back
சினிமா செய்திகள்
விக்ரம் பிரபு விரும்பும் கதாபாத்திரங்கள்
சினிமா செய்திகள்

விக்ரம் பிரபு விரும்பும் கதாபாத்திரங்கள்

தினத்தந்தி
|
28 Sept 2023 6:59 AM IST

வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.என்று விக்ரம் பிரபு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள விக்ரம் பிரபு தற்போது யுவராஜ் தயாளன் இயக்கிய 'இறுகப்பற்று' படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் விக்ரம்பிரபு அளித்துள்ள பேட்டியில், 'நான் ஒரு நடிகனாக வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். தொடர்ச்சியாக அதிரடி கதைகளில் நடிக்கிறேன் என்கின்றனர். நான் அறிமுகமான கும்கி ஆக்சன் படம் இல்லை.

சண்டை படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் அதுமாதிரியான கதைகள் வந்துவிட்டன. குறிப்பிட்ட இமேஜுக்குள் அடங்காமல் எந்த கதையிலும் கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இறுகப்பற்று அப்படி ஒரு வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரம் கொண்ட படமாக அமைந்துள்ளது.

என்னுடன் விதார்த், ஸ்ரத்தா ஸ்ரீநாத், சானியா அய்யப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எல்லோருக்கே இது ஸ்பெஷலான படமாக இருக்கும். 15 நிமிடம் கதையை கேட்டதுமே உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க எல்லோருமே விரும்புவார்கள். இந்த படம் எனது மனைவிக்கு நான் தரும் பிறந்த நாள் பரிசு' என்றார்.

மேலும் செய்திகள்