'சந்து சாம்பியன்' நடிகரை முத்தமிட்டு பாராட்டிய நடிகை
|'சந்து சாம்பியன்' படத்தை பார்த்து பழம்பெரும் நடிகை ஷபானா, கார்த்திக் ஆர்யனை முத்தமிட்டு பாராட்டியுள்ளார்.
சென்னை,
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகிறது. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுக்காட்டாகும். அந்த வகையில் இந்தியாவுக்காக பாரா ஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி உள்ளது.
கபீர் கான் இயக்கும் இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த 14-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்து பழம்பெரும் நடிகை ஷபானா நடிகர் கார்த்திக் ஆர்யனை முத்தமிட்டு பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் ஆர்யனை முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்து, அதனுடன்,
கபீர் கான் இயக்கிய சந்து சாம்பியன் படத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். கார்த்திக் ஆரியனின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குழந்தைத்தனமாக மிகவும் அழகான புன்னகையுடன் நடித்திருப்பது அவரை ஆணவமாக காட்டுவதைத் தடுத்தது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.