< Back
சினிமா செய்திகள்
ஓ.டி.டி-ல் வெளியாகும் சந்திரமுகி-2 திரைப்படம்
சினிமா செய்திகள்

ஓ.டி.டி-ல் வெளியாகும் சந்திரமுகி-2 திரைப்படம்

தினத்தந்தி
|
21 Oct 2023 1:56 PM IST

சந்திரமுகி-2 திரைப்படம் ஓடிடி-ல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை,

ரஜினி, ஜோதிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'சந்திரமுகி'. இப்படத்தில் திகில், காமெடி, பாடல்கள், மாஸ், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்று எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்தியது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக 'சந்திரமுகி 2' வெளியாகியது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த படம் ஓ.டி .டி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'சந்திரமுகி -2' திரைப்படம் வரும் 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்