< Back
சினிமா செய்திகள்
ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் சலார் திரைப்படம்... 750 வாகனங்களுடன் உருவான சண்டை காட்சி...!
சினிமா செய்திகள்

ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் 'சலார்' திரைப்படம்... 750 வாகனங்களுடன் உருவான சண்டை காட்சி...!

தினத்தந்தி
|
5 Nov 2023 2:30 PM GMT

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை,

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமாக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை உலகத்தரத்தில் உருவாக்க இயக்குனர் பிரசாந்த் நீல் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தின் சண்டை காட்சிகளில் மட்டும் ஜீப்புகள், லாரிகள் உள்ளிட்ட 750 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த காட்சிகள் உருவாக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்