< Back
சினிமா செய்திகள்
சைந்தவ் படத்தின் புதிய பாடல் வெளியீடு..!
சினிமா செய்திகள்

'சைந்தவ்' படத்தின் புதிய பாடல் வெளியீடு..!

தினத்தந்தி
|
30 Dec 2023 1:50 AM IST

'சைந்தவ்' திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது.

தெலுங்கில் ஹிட் பட சீரிஸ்களை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெங்கடேஷ் டகுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சைந்தவ்'. மேலும் இந்த படத்தில் நவாசுதீன் சித்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்யா, ஆண்ட்ரியா, சாரா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கட் பொயனபள்ளி தயாரித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரி பி.ஹெச். படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'சைந்தவ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் 'பூரணமே' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை எஸ்.பி.சரண் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்