'லவ்வர்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
|'லவ்வர்' திரைப்படம் வருகிற 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இதையடுத்து இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், 'லவ்வர்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 'லவ்வர்' திரைப்படம் வருகிற 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.