< Back
சினிமா செய்திகள்
பிரம்மயுகம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
சினிமா செய்திகள்

பிரம்மயுகம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

தினத்தந்தி
|
30 Jan 2024 4:11 PM IST

பிரம்மயுகம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் 'பிரம்மயுகம்'. இந்த படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 'பிரம்மயுகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதனை தொடர்ந்து, 'பிரம்மயுகம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'பிரம்மயுகம்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்