< Back
சினிமா செய்திகள்
சமந்தாவின் யசோதா படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ்
சினிமா செய்திகள்

சமந்தாவின் 'யசோதா' படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ்

தினத்தந்தி
|
4 Nov 2022 1:35 PM GMT

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் கடந்த 27-ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'யசோதா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 'யசோதா' திரைப்படம் வரும் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்