< Back
சினிமா செய்திகள்
சிவபெருமானாக நடித்துள்ள அக்ஷய் குமார் படத்துக்கு தணிக்கை குழு தடை?
சினிமா செய்திகள்

சிவபெருமானாக நடித்துள்ள அக்ஷய் குமார் படத்துக்கு தணிக்கை குழு தடை?

தினத்தந்தி
|
15 July 2023 9:18 AM IST

சிவபெருமான் வேடத்தில் அக்ஷய் குமார்.

பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஏற்கனவே 'ஓ மை காட்' என்ற இந்தி படத்தில் ஸ்ரீகிருஷ்ணராக நடித்து இருந்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது 'ஓ மை காட்' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ள 'ஓ.எம்.ஜி 2' என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தில் அக்ஷய் குமார் சிவபெருமான் வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்துக்கு ஏற்கனவே எதிர்ப்புகள் கிளம்பின. தற்போது 'ஓ.எம்.ஜி 2' படத்தை முடித்து தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் அனுமதி அளிக்காமல் தடை விதித்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது.

படத்தை மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பும்படி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ராமர் தோற்றத்தையே மாற்றி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக கண்டனங்கள் எழுந்தன. படத்துக்கு அனுமதி அளித்த தணிக்கை குழுவையும் விமர்சித்தனர்.

இதனாலேயே 'ஓ.எம்.ஜி. 2' படத்துக்கு தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. படத்தை மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்