திருமணத்தில் எச்சரிக்கை தேவை - நடிகை தமன்னா
|தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் திருமணம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "திருமணம் என்பது முக்கியமான பொறுப்பு. அந்த பொறுப்புக்கு நம்மை தயார்படுத்திக்கொண்ட பிறகுதான் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும்.
திருமணம் என்றால் ஏதோ பார்ட்டி செய்து கொள்வது போல அல்ல. அது நீண்ட காலம் இணைந்து இருக்கும் பந்தம். எனவே திருமண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் பத்து ஆண்டுகள் பிஸியாக இருப்பேன் என்று நினைத்தேன். 30 வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டேன்.
அதன் பிறகு முடிவை மாற்றிக்கொண்டேன். இந்த விஷயத்தில் இன்றைய தலைமுறையை பாராட்ட வேண்டும். முந்தைய தலைமுறை மாதிரி ஒருவருக்காக தங்கள் கருத்துகளை மாற்றிக்கொள்வது, மற்றவர்களுக்காக யோசிப்பது இல்லை. நான் கூட முதலில் யாராவது ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ என்று அடுத்தவர்களை பற்றி யோசித்ததால் அதன் தாக்கம் என் மீது விழுந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒவ்வொரு விஷயத்திலும் சொந்தமாக முடிவெடுத்துக்கொள்கிறேன்'' என்றார்.