< Back
சினிமா செய்திகள்
மாணவர் மீது சாதி வெறி தாக்குதல்: ஜி.வி.பிரகாஷ் கண்டனம்
சினிமா செய்திகள்

மாணவர் மீது சாதி வெறி தாக்குதல்: ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

தினத்தந்தி
|
13 Aug 2023 10:39 AM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை மீது நடந்த சாதி வெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு நடிகர்-நடிகைகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்', என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் உள்பட திரை பிரபலங்கள் பலரும் நெல்லையில் மாணவர் மீது நடந்த சாதி வெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்