< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் டிரைலர் வெளியானது
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' படத்தின் டிரைலர் வெளியானது

தினத்தந்தி
|
12 Dec 2022 2:25 PM IST

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பிசியான நடிகராக வலம்வருகிறார். தற்போது அவர் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் பாபு யோகிஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்