சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் உதவியுடன் நடைபெற்ற கார் பேரணி - நடிகர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்
|கார் பேரணியை நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
சென்னை,
தேசிய பார்வை மாற்றுத்திறனாளிகள் சங்கம், மெட்ராஸ் மோட்டார் கிளப் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகளின் சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில், பார்வை மாற்றத்திறனாளிகள் உதவியுடன் நடைபெற்ற வித்தியாசமான கார் பேரணியை நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த கார் பேரணியில், பிரெய்லி முறையில் பிரத்யேக வரைபடம் மூலம் பார்வை மாற்றுத்திறனாளிகள் காரில் அமர்ந்து வழி சொல்ல, மற்றொரு நபர் வாகனத்தை இயக்கினார். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த், "அந்தகன் திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்தபோது அவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன். இன்று நடைபெறும் பேரணி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கம் மற்றும் உற்சாகத்தை வழங்குவதாக இருக்கும். இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.