< Back
சினிமா செய்திகள்
விரைவில் கேப்டன் மில்லர் டிரைலர் - நடிகர் தனுஷ் தகவல்
சினிமா செய்திகள்

விரைவில் 'கேப்டன் மில்லர்' டிரைலர் - நடிகர் தனுஷ் தகவல்

தினத்தந்தி
|
13 Dec 2023 10:15 PM IST

'கேப்டன் மில்லர்' திரைப்படம் 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 'கேப்டன் மில்லர்' படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "கேப்டன் மில்லர்.. டிரைலர் விரைவில். பொங்கல் ரிலீஸ்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்