< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கேப்டன் மில்லர் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை..!
|9 Jan 2024 4:33 PM IST
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது
சென்னை,
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தை 1,166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.