< Back
சினிமா செய்திகள்
கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!
சினிமா செய்திகள்

'கேப்டன் மில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

தினத்தந்தி
|
10 May 2023 5:04 PM IST

‘கேப்டன் மில்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் மாதத்திலும், டீசர் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



மேலும் செய்திகள்