மலையாளத்தில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது, ஆனால்...- மாளவிகா மேனன்
|இதுவரை முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாது என்று நடிகை மாளவிகா மேனன் கூறினார்.
சென்னை,
மலையாளத்தில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் மாளவிகா மேனன், தமிழில் 'இவன் வேற மாதிரி', 'விழா', 'பிரம்மன்', 'வெத்துவேட்டு', 'நிஜமா நிழலா', 'பேய் மாமா', 'அருவா சண்ட' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை மாளவிகா மேனன் சினிமா வாழ்க்கை பற்றிப்பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
'நான் முதன்முதலில் நடித்தது 'நித்ரா' என்ற மலையாள படத்தில்தான். அப்போது எனக்கு 14 வயது. சின்ன பெண்ணாக இருப்பதால் என்னை இயக்குனர் ஹீரோயினுக்கு தங்கையாக நடிக்க வைத்துவிட்டார்.
பின்னர், '916' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனேன். அதில் நிறைய சவாலான காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது. சிரமம்தான் இருந்ததே தவிர, பெரியளவில் கேலி பேச்சுகள் வரவில்லை. மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களும் வராது. ஆனால், தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம்.
இதுவரை முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாது. ஆனால் அப்படி நடிக்க கேட்டிருக்கிறார்கள். கதைக்கு மிகவும் அவசியப்பட்டால், அது பேசப்படும் காட்சியாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் ஒன்றும் தவறு இல்லை. அப்படி ஒரு படம் வரட்டும் பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.