< Back
சினிமா செய்திகள்
அரசியலுக்கு வர முடிவா? மஞ்சு வாரியர் விளக்கம்
சினிமா செய்திகள்

அரசியலுக்கு வர முடிவா? மஞ்சு வாரியர் விளக்கம்

தினத்தந்தி
|
17 Jan 2023 11:38 AM IST

மஞ்சு வாரியர் விரைவில் ஒரு அரசியல் கட்சியில் இணையப்போகிறார் என்றும் தகவல்கள் பரவி உள்ளன. இதற்கு அவர் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது அஜித்குமாருடன் நடித்துள்ள துணிவு படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் மஞ்சு வாரியர் அரசியலில் குதிக்க தயாராகி வருவதாகவும் சில கட்சிகளிடம் இருந்து அவருக்கு அழைப்புகள் வந்துள்ள நிலையில் விரைவில் ஒரு அரசியல் கட்சியில் இணையப்போகிறார் என்றும் தகவல்கள் பரவி உள்ளன.இதற்கு மஞ்சுவாரியர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், ''தேர்தல் சமயங்களில் எல்லாம் நான் அரசியலில் ஈடுப்படப் போவதாக தகவல்கள் பரவுவது வழக்கமாக நடக்கிறது. அப்படி எந்தத்திட்டமும் என்னிடம் இல்லை. எனக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வமும் இல்லை. அஜித்குமாருடன் துணிவு படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் பைக் பயணம் செய்த அனுபவமும் மறக்க முடியாதது. அஜித் எளிமையானவர், அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்'' என்றார்.

மேலும் செய்திகள்