< Back
சினிமா செய்திகள்
அரசியலுக்கு வர முடிவா? விஷால் விளக்கம்

Image Credits : Instagram.com/actorvishalofficial

சினிமா செய்திகள்

அரசியலுக்கு வர முடிவா? விஷால் விளக்கம்

தினத்தந்தி
|
24 July 2023 10:10 AM IST

மார்க் ஆண்டனி படக்குழுவினர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் 'மார்க் ஆண்டனி' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் மார்க் ஆண்டனி படக்குழுவினர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

அப்போது ஒரு மாணவர், 'நீங்கள் விஜய்யின் தீவிர ரசிகர். அவருடன் இணைந்து அரசியலுக்கு வருவீர்களா?' என்று கேள்வி கேட்டார்.

இதற்கு விஷால், 'இது கடவுளால்தான் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம். ஏற்கனவே எல்லாரும் அரசியல்வாதிகள்தான். எல்லாரும் பசியென்று வந்தவர்களுக்கு காசு கொடுத்து இருப்பீர்கள். என்னை பொறுத்தவரை அரசியல் என்பது சமூகசேவை. இது வியாபாரம் அல்ல. பசியென்று வருபவர்களுக்கு 50 ரூபாய் கொடுத்தாலே அவர்கள் அரசியல்வாதிதான்' என பதில் அளித்தார். நடிகர் விஷாலின் இந்த பதில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

'மார்க் ஆண்டனி' படத்தில் விஷால் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்