திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிக்கலாமா? காஜல் அகர்வால் விளக்கம்
|திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நானும், எனது கணவரும் வெளிப்படையாகவே இருக்கிறோம் என்று காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் திருமணமான நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா? என்று காஜல் அகர்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து காஜல் அகர்வால் கூறும்போது, "நடிக்க கூடாது என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நானும், எனது கணவரும் வெளிப்படையாகவே இருக்கிறோம். காதல் காட்சிகள் என்றால் சக நடிகருடன் நான் நெருங்கித்தான் நடிக்க வேண்டும். அப்படி நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது.
திருமண வாழ்க்கையும், செய்யும் தொழிலும் வேறு வேறு. ஆனாலும் கவர்ச்சி காட்சி கதைக்கு தேவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று வதந்தி பரவியது. அதற்கு எனது செயல்கள் மூலம் பதில் அளித்து இருக்கிறேன்'' என்றார்.