தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரமா? - நடிகர் சூரி விளக்கம்
|உதயநிதி ஸ்டாலின் என்னைப் பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என நடிகர் சூரி கூறினார்.
மதுரை,
மதுரையில் இன்று திருமண விழா நிகழ்வில் நடிகர் சூரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியோடு நடிகர் சூரி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முதல்முறை வாக்காளர்கள் கன்னிச்சாமிகள். அனைவரும் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நமது வாக்கு சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கு நாட்டின் வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும்.
நமது வாக்கை யாருக்கு செலுத்த வேண்டுமோ அதை கணித்து வாக்கை செலுத்த வேண்டும். 'கருடன்' படம் பணிகள் முடிந்துவிட்டது. 'விடுதலை 2' படத்திற்கு முன்பு 'கருடன்' படம் வெளியாகும். தென்மாவட்டங்களில் பிரசாரத்தை தொடங்கி உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளேன். என்னை அவர் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை.
நான் படப்பிடிப்பில் பிசியாக உள்ளேன் என அவருக்கு தெரியும். இது நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். நல்லதாகவே நடக்கும். எனவே, மக்களுக்கும் நல்லது நடந்தால் மகிழ்ச்சி தான்" என்று தெரிவித்தார்.