< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அம்பானி இல்லத் திருமண விழா: ஒரு பாடலை பாட ராப் பாடகர் ரேமாவுக்கு இத்தனை கோடியா?
|14 July 2024 7:35 AM IST
அம்பானி இல்லத் திருமண விழாவில் ராப் பாடகர் ரேமா கலந்துகொண்டார்.
மும்பை,
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று முன்தினம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் இன்று வரை மும்பையில் நடைபெறுகிறது. இதனால், மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்று வருகின்றனர். மேலும், பிரபல பாடகர்களான ஜஸ்டின் பீபர், ரேமா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு கச்சேரி நடத்தினர். இதில், சம்பளமாக ஜஸ்டின் பீபருக்கு ரூ. 83 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நைஜீரிய ராப் பாடகருமான ரேமா, 'காம் டவுன்' பாடலுக்குப் பெயர் பெற்றவர். இந்நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண விழாவில் 'காம் டவுன்' என்ற ஒரு பாடலை பாடுவதற்காக பிரபல ராப் பாடகர் ரேமாவுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.