< Back
சினிமா செய்திகள்
இந்தியன் 2 படத்தின் புதிய பாடல் வெளியீடு

கோப்புப்படம் 

சினிமா செய்திகள்

'இந்தியன் 2' படத்தின் புதிய பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
1 July 2024 7:49 PM IST

'இந்தியன் 2' திரைப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'இந்தியன்'. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா வேடத்தில் எதிரிகளை அழிப்பது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா மற்றும் ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி 'காலண்டர்' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. கபிலன் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடலை சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'இந்தியன் 2' திரைப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்