விடுதலை 2 - கேமியோ ரோலில் பிரபல நடிகர்?
|பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா, விடுதலை 2 படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
விடுதலை படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தென்காசியில் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
முதல் பாகத்தில் கேமியோ கேரக்டரில் இணைந்த விஜய் சேதுபதி தற்போது இரண்டாவது பாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட கேரக்டரில் நடித்து வருகிறார்.