மிகப்பெரிய தொகைக்கு ஏலம்போன நடிகர் மம்முட்டி எடுத்த புகைப்படம்
|மம்முட்டி எடுத்த புகைப்படம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது.
சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவர் நடித்த பிரம்மயுகம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து இவர் நடித்த 'டர்போ' படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை வைசாக் இயக்கினார். வைசாக் இதற்கு முன் மோகன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர், தான் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் எடுத்த புகைப்படம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது.
கொச்சியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி எடுத்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படம் இடம்பெற்றது. இந்த புகைப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத்தொடர்ந்து, இந்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படத்தை தொழிலதிபர் ஒருவர் மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்.