கதாநாயகனாக நடிக்கும் புலமைப்பித்தன் பேரன்
|மறைந்த புலவர் புலமைப்பித்தன் பேரன் திலீபன் புகழேந்தி, `எவன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் தீப்தி மானே, ஜே.கே.சஞ்சீத், உஜ்ஜைனி ராய் கானா பாலா, பாண்டி ரவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் லைட் சினிமாஸ் சார்பில் துரைமுருகன் தயாரித்து டைரக்டு செய்கிறார்.
படம் குறித்து அவர் கூறும்போது, ``நாயகன் தாய்க்காக உயிரையும் கொடுப்பார். உயிரையும் எடுப்பார் என்பது படத்தின் கரு.நாயகன் திலீபன் புகழேந்தி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்து இருக்கிறார்'' என்றார்.
கதாநாயகனானது குறித்து திலீபன் புகழேந்தி கூறும்போது, ``நான் இருசக்கர வாகன பந்தய வீரராக இருந்து தேசிய அளவிலான போட்டியில் வென்று இருக்கிறேன். இப்போது `எவன்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். `சாகாவரம்' என்ற படத்தை இயக்கி கதையின் நாயகனாகவும் நடிக்கிறேன். `ஆண்டனி' என்ற படத்திலும் நடிக்கிறேன்.
`எவன்' படம் அம்மா-மகன் உறவை புதிய கோணத்தில் சொல்லும். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். நான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பது தாத்தா புலமைப்பித்தன் மற்றும் பாட்டியின் கனவு. அதை நிறைவேற்றி இருக்கிறேன்'' என்றார்.