< Back
சினிமா செய்திகள்
வரவேற்பை பெறும் சைத்தான் திரைப்படம் - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
சினிமா செய்திகள்

வரவேற்பை பெறும் 'சைத்தான்' திரைப்படம் - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

தினத்தந்தி
|
9 March 2024 7:08 PM IST

சூப்பர் நேச்சூரல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'சைத்தான்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

மும்பை,

இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சைத்தான்'. இந்த படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். சூப்பர் நேச்சூரல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய பாக்ஸ் ஆபீசில் முதல் நாளில் 'சைத்தான்' திரைப்படம் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியில் மட்டுமே இந்த படம் வெளியாகியுள்ள நிலையில், பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருந்தால் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது நாளான இன்று படத்தின் வசூல் மேலும் ஏற்றம் கண்டுள்ளது. இரண்டாம் நாள் வர்த்தகம் 18 முதல் 20 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 'சைத்தான்' திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்