ரூ.35 கோடிக்கு வாங்கினார்... மகளுக்கு பங்களாவை பரிசளித்த சிரஞ்சீவி
|சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜாவுக்கு ஐதராபாத்தில் ரூ.35 கோடி மதிப்பில் சொகுசு பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி பரிசாக வழங்கி இருக்கிறார்.
தெலுங்கு பட உலகில் 1970-களில் கதாநாயகனாக அறிமுகமாகி இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நாயகனாகவே நடித்து கொண்டு இருக்கிறார் சிரஞ்சீவி. சம்பாதித்த பணத்தில் ஆந்திராவில் அதிக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அறக்கட்டளை தொடங்கி சமூக சேவை பணிகளும் செய்கிறார். சிரஞ்சீவிக்கு ராம்சரண் என்ற மகனும் சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் மகள் ஸ்ரீஜாவுக்கு சிரஞ்சீவி ஐதராபாத்தில் சொகுசு பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி பரிசாக வழங்கி இருக்கிறார். இந்த பங்களா முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர்களால் இந்த பங்களா வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்களாவின் மதிப்பு ரூ.35 கோடி இருக்கும் என்று தெலுங்கு இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஸ்ரீஜா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். மீண்டும் மறுமணத்துக்கு அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சொகுசு பங்களாவை சிரஞ்சீவி வாங்கி கொடுத்து இருக்கிறார். சீரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரைய்யா படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.